12651160_10203932291627955_2705405872142513751_n
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிரது.
தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் 12 ஆண்டுகள். வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் என ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதுவும் மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது. அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.
 
11225442_10203932291227945_1152480393514251268_n
மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும்.
சிங்கராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு கீழே.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நட்சத்திர சிங்கத்தின் உடல், வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். என்ன ஒரு விண்ணியல் அறிவு அவர்களுக்கு.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது
சூரியன் கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்று அழைக்கப்படுகிறது!
மோகன் காந்தி