Fingerprint registration mandatory
சென்னை:
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழ்க அரசு அறிவித்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழ்க அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்றும், அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தியுள்ள அரசு, வரும் 17ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றுதெரிவித்துள்ளது.