Whatsapp

டெல்லி: ப்ளாக் பெரி மற்றும் நோக்கியா போன்களின் சில மாடல்களில் வாட்ஸ் அப் சேனை இனி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் தனது ப்ளாக் ஸ்பாட் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ப்ளாக் பெரி மற்றும் நோக்கியா எஸ் 40, நோக்கியா ஸ்ம்பியன் எஸ்60, ஆந்த்ராய்ட் 2.1, 2.2, விண்டோஸ் 7.1 ஆகிய ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட போன்களில் இந்த ஆண்டு இறுதிக்கு மேல் வாட்ஸ் அப் சேவை கிடைக்காது.
இந்த போன்களில் வாட்ஸ் அப் சேவையை பெறுவதற்கான திறன் குறைவாக உள்ளது. இதை விஸ்தரிப்பு செய்ய வேண்டும். இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சரியான முடிவு. தொடர்ந்து வாட்ஸ் அப் சேவையை பெற வேறு மொபைல்களுக்கு மாறிக் கொள்வது நல்லது.
புதிய ஆந்த்ராய்டு, ஐபோன் அல்லது வீண்டோஸ் போன்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் மாறிவிட வேண்டும். வாட்ஸ் அப் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரியில் வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் கையகப்படுத்தியது. இது வரை 1 பில்லியன் பேர் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துகிறார்கள். 7ல் ஒருவர் இந்த சேவையை பயன்படுத்துவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.