தீபாவளி, பொங்கல் என்றால், முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கும். பட்டாசு, பொங்கல்.. இத்தியாதிகளோடு புதுப்படம் பார்ப்பது என்பதும் பண்டிகை பட்டியலில் இருக்கும். ஆனால், சமீப காலமாக, விழா நாட்களில் “நட்சத்திரங்களின்” படம் ஒன்றிரண்டுதான் வெளியாகும் என்ற நிலை.
இந்த பொங்கலுக்கு அப்படி இல்லை. நான்கு முக்கிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
தாரைதப்பட்டை
எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் தாரைதப்பட்டை ரிலீஸ் ஆகிறது. பாலா இயக்கத்தில் வரும் படம் என்றாலே ஒரு மாஸ் உண்டு. அதோடு  சசிகுமார் நடிக்கும் படம். ஆகவே ரிலீஸ் ஆகும் நான்கு படங்களில் முக்கியத்துவம் பெறுகிறது தாரைதப்பட்டை.
 
ரஜினி முருகன்
அடுத்து.. “ரஜினி முருகன்”. ரிலீஸூக்கு தயாராகியும் பல்வேறு பிரச்சினைகளால் வெளியீடு தள்ளிப்போன படம். ஒருவழியாக பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து பொங்கலுக்கு வெளியிடுகிறார்கள்.
கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் இருந்து பேஸ்புக் பார்க்கும் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஜாலி ஹீரோ சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம். இதற்கும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருப்பதில் வியப்பில்லையே! தவிர, ராஜ்கிரண், சமுத்திரகனி இருவரும் முக்கிய வேடங்களில் நடிப்பதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
 
கதகளி
அடுத்ததாக.. அடிதடி நாயகன், விஷால் நடிக்கு, “கதகளி”.   அதிரடியோடு, காமெடி ப்ளஸ் நல்ல மெஸேஜூம் இருக்கும். காரணம், படத்தை இயக்குவது பாண்டிராஜ்.  ஆகவே இதுவும் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
கெத்து
“நான் ஒரு அப்பாவிங்க” என்கிற முகபாவனையில் இருந்தாலும், மினிமம் கேரண்ட்டி ஹீரோவாக ஜொலிக்கும் உதயநிதியின் “கெத்து” படமும் பொங்கலுக்கு ரிலீஸ்! காமெடி கலாட்டா என்கிற ஜாலி உத்தரவாதத்துடன் தியேட்டருக்கு மக்களை ஈர்க்கும் ஹீரோவின் படம். அதோடு உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிப்பது படத்துக்கு பெரிய ப்ளஸ்.
ஆக, இந்த பொங்கல், திரைப்பொங்கலாகவும் இருக்கும்!