பெருந் தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினுடன் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறும் போது திமுக கூட்டணியில் ஒரு தொகுதி மட்டுமே கிடைத்ததில் திருப்திதான் என்று கூறியுள்ளார். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.