newsbond
ந்து, நாலு, ஏழு… “ விரல்விட்டு எண்ணி கணக்கு பார்த்தபடியே வந்தார் நியூஸ்பாண்ட்.
“என்ன கணக்கு போடுகிறீர்…   தேர்தலில் நிற்கப்போகிறீரா?” என்று நாம் அப்பாவியாக முகத்தைவைத்துக்காண்டு கேட்டோம்.
“கிண்டலா?” என்று முறைத்த நியூஸ்பாண்ட், “நான் போட்ட கணக்கு வேறு. பிறகு சொல்கிறேன். இப்போது அரசியல்மட்டத்தில் போடப்படும் முக்கிய கணக்கைச் சொல்கிறேன்!
25-modi-karuna-300-jpg
 
தி.மு.க. – தே.மு.தி.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்!” என்று நிறுத்தினார்.
“அப்படியா…?”
“ஆமாம்!  ரஜினியை இழுத்து தனித்து தேர்தலை சந்திப்பது என்று பாஜகவுக்குள்ளேயே சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேலிடத்தில் உள்ளவர்கள் வேறு மாதிரி சிந்திக்கிறார்கள்.
தி.மு.க.வையும் தே.மு.தி.க.வையும் சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதே சரியாக இருக்கும் என்பது அவர்களது திட்டம்!”
“தே.மு.தி.க. சரி…! தி.மு.க….?”
ஏன், தி.மு.கவுக்கு என்ன? ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் தற்கொலை சம்பவத்தில்கூட.. சமூகநீதி காக்கும் கருணாநிதி பெரிதாக பா.ஜ.கவை விமர்சிக்கவில்லையே…
பதிலுக்கு, பா.ஜ.கவில் இருந்தும் பச்சை சிக்னல் ஒளிர்கிறது. கோவை வந்த பிரதமர் மோடி,  2ஜி பற்றி வாய் திறக்கவில்லை. தவிர, தான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை அழுத்தமாகச் சொன்னார். மேலும் அம்பேத்கர் பற்றியும் சிலாகித்தார். இதெல்லாம் கருணாநிதி டிரேட் மார்க் விசயம் அல்லவா..”
”உண்மைதான்…!”
“இதற்கிடையில், காங்கிரஸ் – அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல்!”
“என்னது.. ?”
”அதிர்ச்சி அடையாதீர்!  சமீபத்தில் ராகுலை சந்தித்த அரசியல் புள்ளியிடம், அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ராகுலின் செகரட்டரி ஆர்வமாக கேட்டிருக்கிறார்.  இதை வைத்துத்தான் இப்படி ஒரு யூகம் கிளம்பியிருக்கிறது!”
“ஓ…!”
“சரி.. நான் கிளம்புகிறேன்…!”
“என்ன இது…அவ்வளவுதானா..?”
சிரித்த நியூஸ்பாண்ட், “அதான் அடிக்கடி வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேனே.. அப்புறம் என்ன?” என்று கிளம்ப எத்தனித்தார்.
“இரும்.. இரும்…! வரும்போது ஏதோ கணக்கு போட்டபடி வந்தீர்.. கேட்டால் கடைசியில் சொல்கிறேன் என்றீரே..!”
“ஓ… அதுவா? முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் தனது பெயரை மாற்றிக்கொள்ளப்போகிறார்! ஜோதிடர்களை அழைத்து நிறைய ஆலோசனை செய்து, இந்த பெயர் மாற்றத்துக்கு திட்டமிட்டுமிட்டார்!”
“அடடே..! அவர் யார்?”
“ஆரம்பத்தில் துர்கா! இது  உக்கிர தெய்வத்தின் பெயராக இருக்கிறதே என்று சாந்தி என்று மாற்றிக்கொண்டார். கடைசி  எழுத்து “தி” என்று வருதவது சரியல்ல என்று ஒரு ஜோதிடர் சொல்ல, “சாந்தா” என்று மாற்றிக்கொண்டார்… இப்போது “அந்த பெயரும் சரியில்லை. பெயரை மாற்றினால்தான் நீங்கள் “முதல்வர் வீட்டம்மா”ஆக முடியும் என்று வேறு ஒரு ஜோதிடர் சொல்ல.. அதற்கும் தயாராகிவிட்டார்.  நியூமராலஜி மற்றும் ஜாதகப்படி  பல பெயர்களை  பரிசீலனை செய்துகொண்டிருக்கிறாராம்.  அவர் யார் என்று தெரிகிறதா?”
“இவ்வளவு சொல்லியும் தெரியாமலா?   வாழ்க பகுத்தறிவு!”
சிரித்தபடியே கிளம்பினார் நியூஸ்பாண்ட்.