z

பெண்கள் உடை பற்றி அவ்வப்போது எழும் விவாதங்கள் தற்போது மீண்டும் தலைதூக்கி இருக்கின்றன. அதுவும் சமூகவலைதளங்களில் பெண்களின் ஆடை குறித்து கடும் விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், த.மு.மு.க.வின் மூத்த தலைவரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏவுமான பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லாவிடம் இது குறித்து கேட்டோம். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கொள்கை கொண்டவர் இவர்.

பெண்கள் ஆடை தொடர்பாக சர்ச்சை மீண்டும் எழுந்திருக்கிறது. தங்கள் விருப்பப்படி ஆடை அணிவது பெண்களின் உரிமை அல்லவா?

கண்ணியமான ஆடை அணிந்துதான் பெண்கள் பொது இடங்களுக்கு வரவேண்டும். நர்ஸஸை பாக்கிறோம்… கண்ணியமான ஆடையில இருக்காங்க..! , கிறித்துவ பெண் துறவியை பார்க்கிறோம்.. கண்ணியமான ஆடையில இருக்காங்க! அதே போல எல்லா பெண்களும் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என்று சொல்கிறோம். 

 தங்களது ஆடை குறித்து பிறர் முடிவு செய்வது பெண் அடிமைத்தனம் என்று ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே..?

பெண் உரிமைக்கும், இதற்கும் எந்த சம்பநமும் இ்ல்லை!

குறிப்பாக இந்தியா போன்ற வெப்பமண்டல. நாடுகளில் உடல் முழுவதையும் கனத்த ஆடைகளால் மறைத்துக்கொண்டு செல்வது என்பது சிரமம் அல்லவா? இது உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகிறது!

பெண்கள் கவர்ச்சியா ஆடை  அணிய கூடாது. அது ஆண்களை தூண்டுற மாதிரி இருக்கக்கூடாது.

இப்படி சொல்றதே பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமையாளர்கள் சொல்கிறார்களே..

அது அவங்க கருத்து நான் சொல்றது என் கருத்து.

பெண் பலாத்காரப்படுத்தப்பட்டால், அதற்குக் காரணமாக பெண்களின் ஆடை ஆண்களைத் தூண்டுகிறது என்கிற பேச்சும் எழுகிறது.  ஆனால் அவையம் தெரியும்படி ஆடை அணிந்த பெண்கள்தான் பலாத்காரப்படுத்தப்படுகிறார்களா?   பெண் குழந்தைகள்… முதிய பெண்கள்கூட பலாத்காரத்துக்கு ஆளாகிறார்களே!

 கவர்ச்சியாக இல்லாமல் ஆடை அணிவதுதான் பெண்களுக்கு சிறப்பு.

எது கவர்ச்சி என்பதை யார் முடிவு செய்வது?

இப்போ ஒரு மீட்டிங்கல இருக்கேன். அப்புறம் பேசலாம்.

இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ,  ungalpathrikai.com (உங்கள் பத்திரிகை டாட் காம்) இதழுக்கு பேட்டி அளித்தார்.