திராவிடர் கழக பிரச்சார செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர்.
மீடியாக்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும்போதெல்லாலம் எதிர்த்து குரல் கொடுப்பவர். திரைப்பட இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய நியூ என்ற படத்தில், பெண்களைஇழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் நிறைந்திருக்கிறது என்று தகவல் வெளியானவுடன் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தவர்.
திரைப்பட விழா ஒன்றின் மேடையிலேயே, “தமிழ் சினிமாவில் நடிக்க வரும் பலர், எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள்” என்று வெளிப்படையாக தனது ஆதங்கத்தைக் கொட்டியவர் அருள்மொழி.
இவரிடம் சிம்புவின் பீப் பாடல் பற்றி கேட்டோம்.
அவர், “இந்த விசயத்தைக் கேட்டதும் அதிர்ந்துபோய்விட்டேன். உச்சகட்ட அருவெறுப்பான செயல் இது. இதைக் கண்டிக்க பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. அடிப்படை மானம் சூடு சுரணை உள்ள அனைவருமே கண்டிக்க வேண்டிய செயல் இது.
.தற்போது அந்த பாடல் வலையுலகத்திலிருந்து நீக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனாலும் சிம்புவும், அனிருத்தும் தண்டனைக்குரிய குற்றவாளிகள்தான்.
சிம்பு மற்றும் பாடலுக்கு இசையமைத்த அனிருத் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்ப்டடிருக்கிறது. இந்த வழக்கில் கடைசி வரை வாதாடி, அவர்கள் இருவருக்கும் உரிய தண்டணை பெற்றுத்தர வேண்டும்
அதோடு இந்த பாடலால் தங்கள் பிள்ளைகள் மனம் பாதிக்கப்படுமே என்று பதறும் பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து சிம்புவின் பெற்றோரான டி.ராஜேந்தர் – உஷாவுக்கும், அனிருத்தின் பெற்றோர் ரவிராகவேந்தருக்கும் பாராட்டு விழா நடத்த வேண்டும். “இவ்வளவு நல்ல பிள்ளைகளை எப்படி வளரத்தீங்க..? அதற்காக நீங்கள் பட்டபாடு என்ன” என்றெல்லாம் கேட்க வேண்டும்” என்று ஆதங்கத்துடன் முடித்தார் அருள்மொழி.
– இனியா