t-rajendar-e1311761301151
சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு இசை அமைத்துள்ள  குறளரசனை   அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
படத்தைப் பற்றியோ, அதில் இடம் பெறும் பாடல்கள் பற்றியோ கேட்பதை விட, சிம்புவின் “பீப்” பாடல் வழக்கு பற்றி கேட்பதிலேயே பத்திரிகையாளர்கள்  ஆர்வமாக இருந்தார்கள்.
பொங்கி  எழுந்த டி.ஆர், “ “பீப் பாடல் விவகாரத்தில் சென்னை மற்றும் கோவை காவல்துறையினர் சம்மன் அனுப்பினாங்க.  ஒரு குற்ற வழக்குக்கு இரண்டு இடங்களில்  இருந்து சம்மன்கள் வந்தது.  . இரண்டு இடத்திலும் எப்படி ஆஜராக முடியும்?. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நியாயம் கிடைக்க போராடுறோம். கடவுள் அருளால் வழக்கில் வெற்றி பெறுவோம்” என்றவர், இன்னும் குரல் உயர்த்தி, , “காவல்துறையில் ஆஜராகவேண்டும் என்று சிம்பு முடிவு எடுத்தால் முக்காடு போட்டுக்கொண்டு போக மாட்டார். லட்சக்கணக்கான ரசிகர்களுடன் ஆஜராகும் தெம்பு அவருக்கு இருக்கிறது!” என்றார்.
தொடர்ந்து, “எதிலுமே ஒரு நோக்கம் இருக்கணும்.  அந்த வழக்கைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாங்க. இன்றைக்கு ஏன் அந்த வழக்கு அடங்கிப் போய்விட்டது?  மன்னிப்பு கேட்கணும் என்று போராடியவர்கள் எல்லாம் இன்று எங்கே போனாங்க? மூன்று மாணவிகள் இறந்து போனாங்களே.. , அதற்கு அந்த மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அதை எல்லாம் ஏன் யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்றவர், கடைசியாக சொன்னார்:
“ நான் எதிலுமே ஒரு அறிவுபூர்வமாக சிந்திப்பேன்!”