ஏவி.எம். பிள்ளையார் கோயில் செட்டில்தான் முதல் காட்சியை படமாக்க வேண்டும் என்பது ரஜினி சென்டிமெண்ட். அதே போல அஜீத்துக்கும் பிள்ளையார் சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.
“வேதாளம் வெற்றிக்கு விநாயகரே காரணம் என அஜீத் நம்புகிறார். அந்த படத்தில் விநாயகர் பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதோடு கேரக்டர் பெயரும் பெயரும் கணேஷ் தான்.
இதை நீண்ட நாட்களாகவே அஜீத் ஃபாலோ பண்ணுகிறார். அவரின் வான்மதி, அமர்க்களம் படங்களில் இதுப்போன்ற விநாயகர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றன. படங்களும் ஹிட் ஆயின.
அது மட்டுமல்ல, “ மங்காத்தா” படத்தில் அவரது கேரக்டர் பெயர் பெயர் விநாயக், வீரம் படத்தில் விநாயகம். இதிலிருந்தே பிள்ளையார்தான் அஜீத்தின் ஃபேவரைட் கடவுள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்திய கால் ஆபரேஷன் போதும், விநாயகரா மனமுருக வேண்டிக்கொண்டார். மருத்துவர் ஓ.கே. சொன்னதும், அஜீத்தின் முதல் பயணம் பிள்ளையார்பட்டி விநாயகரை நோக்கித்தான்” என்கிறது அஜீத்துக்கு நெருங்கிய வட்டாரம்.
ஏற்கெனவே பிள்ளையார்பட்டி பேமஸ்தான். அதிலும் அஜீத் வந்து சென்றால்.. ஓகோதான்!