டில்லி

பிரியங்கா காந்தியும் அவர் பாட்டி போல பாஜகவின் அக்னி தாக்குதலகளை தாங்கி ஆக வேண்டும் என நேஷனல் ஹெரால்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு கிழக்கு உத்திரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.    இதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

நேஷனல் ஹெரல்ட் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “மக்களவை தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.   அவர் இவ்வாறு அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்சப்பட்டுள்ளது.   ஏற்கனவே அவர் உத்திரப் பிரதேச தேர்தல் நேரங்களில் மக்கள் மனம் கவர்ந்தவராக விளங்கி உள்ளார்.

பிரியங்கா காந்தியை மற்றொரு இந்திரா காந்தி எனவே பலரும் கூறுகின்றனர்.   இருவருமே அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்.   அத்துடன் சிறு வயதிலேயே இந்திரா தாயை இழந்தார்.   பிரியங்கா தந்தைய இழந்தார்.   அசிங்கமான பல விமர்சனங்கள் தங்கள் குடும்பத்தின் மீது கூறப்பட்டதையும் அவர்கள் இளமையில் கண்டுள்ளனர்.

இந்திரா காந்திக்கு சுமார் 30 வயதாகும் போதே அவரை அரசியலுக்கு வரவேண்டும் என அப்போதைய உத்திரப் பிரதேச முதல்வர் கோவிந்த் பல்லப் பந்த் அழைத்தார்.  ஆனால் இந்திர தனது குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனக் கூறி அதை மறுத்தார்.

இது  போல 1952, 1957 மற்றும் 1962  ஆகிய வருடங்களில் நடந்த தேர்தலில்களில் போட்டியிட வந்த அழைப்புக்களை அவர் மறுத்தார்.  ஆனால் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் மரணம் அடைந்த பிறகு அவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பிரியங்கா நான்கு பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட அழைப்பு வந்த போதும் அதை மறுத்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.   பிரியங்காவும் தனக்கு சிறு குழந்தைகள் உள்ளதால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளார்.  ஆனால் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திரா காந்தி மீது எதிர்க்கட்சிகள் ஏராளமான அவதூறுகளை  பரப்பியது.   அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் இந்திராவைப் பற்றி ஏராளமான அவதூறுச் செய்திகளை கூறி வருகின்றனர்.   மகளிர் மேம்பாட்டுக்காக அதிகம் பாடுபட்ட இந்திராவை மகளிருக்கு எதிரானவர் என சித்தரிக்கப்படுகிறது.

தற்போது அதே போல பாஜகவினர் பிரியங்கா மீதும் ஏராளமான அக்னி தாக்குதல்களை  தொடரக் கூடும்.   பாட்டி இந்திராவைப் போல பிரியங்காவும்  அந்த தாக்குதல்களை தாங்க தயாராக வேண்டும். “ என தெரிவித்துள்ளது.