பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்தின் மறைவுக்கு இன்று வரை பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபலங்கள் இறந்த பிறகு அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் அவர்கள் நினைவாக அப்படியே எந்த மாற்றமும் செய்யப்படாமல் வைக்கப்படும். அவர்களது பெயருக்குப் பக்கத்தில் “நினைவில் கொள்கிறோம்” (remembering) என்று குறிப்பிட்டிருக்கும்.

அந்த வகையில் சுஷாந்த் சிங் இன்ஸ்டாகிராம் பக்கம், அவரது மறைவுக்குப் பின் நினைவுப் பக்கமாக (memorialized) மாற்றப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]