சென்னை: சென்னை மாநகராட்சி பட் ஜெட் வரும் 18ந்தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாநகராட்சி பட்ஜெட் 2024 மார்ச் 19ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.  அப்போதைய பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. அப்போது,   வரும் நிதியாண்டில் (2025-26) வருவாய் வரவு ரூ.5145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5214 கோடியாக இருக்கும். மூலதன வரவு ரூ.3121 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3190 கோடியாகவும் இருக்கும். சொத்து வரி நடப்பு நிதியாண்டில் ரூ.1900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது வரும் நிதியாண்டில் ரூ.2020 கோடியாக உயரும். அதேபோல் தொழில் வரி ரூ.550 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டதுடன், மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம்  62 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.  இந்த பணிகள் இன்னும் முழுமையாக நிறைவுபெறாத நிலையே காணப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு மாநகராட்சி பட்ஜெட் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 18ந்தேதி  தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.  இந்த பட்ஜெட்டிலும்,  மழைநீர் வடிகால் பணி, புதிய மேம்பாலங்கள், . பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

[youtube-feed feed=1]