டைரக்டர் பாலா வீட்டில் சமீபத்தில் வருமானவரி ரெய்டு நடந்தது. அவரது தாரைதப்பட்டை ரிலீஸ் நெருங்குகிற வேளையில் இந்த ரெய்டு நடந்ததால், அந்த பட வரவு செலவு குறித்தே குறிவைக்கப்பட்டதாக பலரும் நினைத்தார்கள்.
ஆனால் உண்மை வேறு என்கிறது கோலிவுட் பட்சி. (அது யாரு அந்த பட்சின்னு கேட்கக்கூடாது!)
“பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது. அப்போது அதிகாரிகள் எதிர்பார்த்த சில ஃபைல்கள் கிடைக்கவில்லை. அன்புவும், பாலாவும் நெருங்கிய தோஸ்த். ஏற்கெனவே, அஜீத்துடன் நடந்த பஞ்சாயத்தில், பாலாவுக்காக “உட்கார்ந்து பேசி” பெரும் தொகை அஜீத்திடமிருந்து வாங்கித் தந்தவர் இந்த அன்புதான். ஆகவே அன்புவின் சீக்ரெட் டாக்குமெண்ட்டுகள், பாலா வசம் இருக்கக்கூடும் என்பதாலேயே பாலா வீட்டில் ரெய்டு நடந்தது!” என்கிறது அந்த கோலிவுட் பட்சி!
ஆனால், அதிகாரிகள் எதிர்பார்த்த ஃபைல்கள் அங்கும் கிடைக்கவில்லை என்பதுதான் ஹைலைட்!
Patrikai.com official YouTube Channel