டில்லி

ந்துத்வா கொள்கையாளரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளது.

இந்துத்வா கொள்கையாளரும் தீவிர வலதுசாரி ஆதரவாளருமான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது சிவசேனா மற்றும் பாஜகவின் நெடுநாளைய விருப்பமாகும்.  தற்போது நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பாஜக இதைக் கூறி வாக்கு சேகரித்தது.

இந்த வருடம் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.  மக்களவையில் வடக்கு மும்பை தொகுதி பாஜக உறுப்பினர் கோபால் ஷெட்டி இது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.  அதற்கு மத்திய அரசு எழுத்து பூர்வமாகப் பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு தனது  பதிலில் பாரத ரத்னா விருது வழங்க அதிகாரபூர்வ பரிந்துரை எதுவும் தேவையில்லை.   அந்தந்த நேரங்களில் விருது வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.  மத்திய அரசு நேரடியாகப் பதில் அளிக்காததால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது கேள்வியாக உள்ளது