mohan-bhagwat_759
 
 
லக்னோ-
இந்தியாவை வலுவான தேசமாக கட்டமைக்கும் நோக்கத்துடன் எழுப்பப்படும் பாரத மாதா கி ஜே என்பதை அனைவரும் முழங்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை  என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் அனைவரும் பாரத் மாதா கி ஜே எ முழக்கமிடவேண்டும் என்ற  விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கி வருகிறது. பாரத் மாதா கி ஜே என்ற முழக்கம் அர்த்தமற்றது என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.  இந்த‌ நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர்  மோகன் பகவத்  பிகேஎஸ் சங்க கட்டிடத்தை லக்னோவில் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:‍
இந்தியாவை மிகப்பெரிய தேசமாக கட்டி எழுப்பும் நோக்கத்துடந்தான்  பாரத் மாதா கி ஜே எனும் முழக்கத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். மற்றபடி இந்த முழக்கத்தை அனைவரும் சொல்ல வேண்டும் என  கட்டாயப்படுத்தவில்லை. இதை யார் மீதும் நாங்கள் திணிக்கவும் இல்லை. உலக மக்களுக்கு நம் வாழ்க்கையும் செயல்களும்தான் வழிகாட்ட வேண்டும். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தின் மூலம் இந்த உலகத்திற்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்.  இதற்காக நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. யார் மீதும் இந்த முழக்க‌த்தை நாங்கள் திணிக்கவில்லை.
இந்தியாவை மிகப்பெரிய தேசமாக்க வேன்டும் என்பதே எங்கள் நோக்கம்.அதற்கான பணிகளைத்தான் ஆர் எஸ் எஸ் செய்து வருகிறது. அவர்கள் விவசாயிகளோ, அல்லது  வாழ்வாதாரத்திற்காக வேறு தொழில்களில்  ஈடுபட்டுள்ளவர்களோ எவ‌ராய் இருப்பினும்  நம் சமூக வளர்ச்சிக்கு பங்காற்றுகிறார்கள். குறைவான முயற்சிகளில் நிறைவான சம்பாத்தியம் ஈட்டவேண்டும். அதைத்தான் நாம் சிற‌ப்புத் திற‌மை என்று கருதுகிறோம். இதுவே  குறிக்கோளாக இருக்கக் கூடாது. நம் சமூக வளர்ச்சிக்கான உழைப்பு அதிகம் இருக்க வேண்டும். நம்  சமூகவளர்ச்சிக்கு நாம் அதிகம் கொடுப்பவர்களாய் இருகக் வேன்டும்.
இந்திய காலாசாரப்படி உலகம் ஒரு குடும்பம் என்பதே கொள்கை.  அதைத்தான் ஒட்டுமொத்த உலகத்தின் முன்  நாம்  உதாரணமாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இளைய தலைமுறையினருக்கு பாரத மாதா கி ஜே பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும் என மோகன் பகவத் சமீபத்தில்  கருத்து தெரிவித்திருந்தார்.
அவருடைய  சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்கு  பதிலடி கொடுக்கும் வகையில்  இசுலாமியக் கட்சித் தலைவர் அசாதுடின் ஓவாய்சி, அரசியலமைப்பின் கீழ் அதை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், கழுத்தில் கத்தி வைத்தாலும் சொல்லமாட்டேன் எனவும் ஆவேசமாய்ப் பேசியிருந்தார்.  ஓவாய்சியின் இந்த மறுப்பு அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.