2DA884C300000578-3284223-Steamy_Bond_backs_Lucia_against_a_mirror_during_their_loaded_exc-a-34_1445503604393

ரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட்  படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் நாளை இந்தியா முழுதும் வெளியாகிறது ஸ்பெக்டர்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட்  ஆகிறார்.

தற்போதைய ஜே.பா. டேனியல் க்ரெய்க்கின் நான்காவது ஜே.பா. படம் இது.   ஏற்கெனவே இவர்,  கேசினோ ராயல், குவான்டம் ஆப் சோலேஸ் மற்றும் ஸ்கைபால்  ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜே.பா.வாக நடித்திருக்கிறார்.

245 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பிரிட்டனின் மிக காஸ்ட்லி படமான  இது., தற்போது வரை 550 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.  சர்வதேச அளவில் கடந்த அக்டோபர் 26-ம் தேதியே இந்தப் படம் வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் நவம்பர் 6-ம் தேதி வெளியானது. இந்தியாவில் நாளைதான் வெளியாகிறது.  இந்தப் படத்தில் டேனியல் க்ரெய்க், மோனிகா பெல்லூச்சி, லீ செய்டாக் இடையே இடம்பெறும் சில முத்தக் காட்சிகள் ‘டூ மச்” ஆக ‘ இருப்பதாகக் கூறி இந்திய தணிக்கைக் குழு அனுமதி தர மறுத்து, முத்த நீள காட்சிகளை வெட்டிவிட்டே யூ.ஏ. சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறது. இதற்கு கருத்துச் சுதந்திரம் கோருவோர் எதிர்ப்புகாட்ட.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஸ்பெக்டர்.

இதையடுத்து.. ஜேம்ஸ்பாண்ட் குறித்த ஒரு அதிரடி கவுண்ட் டவுன் தொடர்,

ஜேம்ஸ்பாண்ட் கதைகள் ஆரம்பித்தது எப்படி,  இதுவரை யார் யார் ஜே.பா. பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள், அவர்களது காதலிகள் யார், படப்பிடிப்புகள் நடந்தது எங்கெங்கே… பலவித தகவல்களுடன்  நாளை ஆரம்பம..

பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்..    அதிரடி கவுண்ட் டவுண் தொடர்

படிக்கத் தவறாதீர்..   உங்கள் patrikai.com  இதழில்…