பெங்களூரு:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் தவறான தொழில் கொள்கைகளை ஊக்குவிப்பதைக் கண்டித்து, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய போராட்டத்துக்கு மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஏஐடியுசி, சிஐடியு, ஹெச்எம்எஸ், ஏஐடியுசி,டியுசிசி, ஏஐசிசிடியு மற்றும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள்,பிஎஸ்என்எல் தொழிற்சங்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.
இந்த போராட்டத்தால் கர்நாடகா மாநில அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த போராட்டத்துக்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களின் ஓட்டுநர்கள் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அவர்கள் பணியில் இருந்தபடியே தார்மீக ஆதரவு தருவார்கள் என்று தெரிகிறது.