”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் அதனுடைய பயன்களை மக்களுக்கு போய்ச் சேரவிடாமல் தடுக்கிற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தி உள்ளது” தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
9aug_cong
அறிவிப்பின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19ஆகவும், டீசல் விலை ரூ.1 ஆகவும், உயர்த்தியிருக்கிறது. இத்தகைய விலை உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலமுறை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் அதை அலட்சியப்படுத்தும் வகையில் தொடர்ந்து விலை உயர்வை அரசு அறிவித்து வருகிறது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.61.32ஆகவும், டீசல் விலை ரூ.50.49ஆகவும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.30ஆகவும், டீசல் விலை ரூ.20ஆகவும் விற்கப்பட்டிருக்கவேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 115 டாலராக இருந்தது, தற்போது 39 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமா நியாயமாக மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயன்களை அபகரிக்கிற நரேந்திர மோடி அரசு மக்கள் நலன் சார்ந்த அரசா? மக்கள் விரோத அரசா? என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.