டில்லி

ர்வதேச நிறுவனமான பிட்ஸ் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்வ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

நம் நாட்டில்  வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சென்ற ஆண்டு இறுதியில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

சர்வதேச நிறுவனமான பிட்ஸ் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்வ் பல நாடுகளில் தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை துல்லியமக வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை ஒட்டி கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடந்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பு முடிவில், “இந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தனிப் பெரும்பான்மை கிடைக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும். ஆயினும் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்தியில் அரசு அமைக்க வேண்டி வரும்.

இதில் பல மாநிலக் கட்சிகளுடன் பாஜகவுக்கு கருத்து வேற்றுமை உள்ளது. ஆகவே அக்கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வராது. ஆகவே மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அதிக வாய்ப்புள்ளது.

பாஜக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள ஓய்வூதியம், விவசாய உதவித் தொகை போன்றவைகள் வாக்காளர் மத்தியில் எதிர்பார்த்த அளவு ஆதரவை அளிக்கவில்லை.

தற்போது நடந்த புல்வாமா தாக்குதல் மக்களிடையே தேசிய உணர்வை தூண்டி உள்ளது. பாஜக இதை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. ஆனால் அந்த முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை உடனடியாக சொல்ல முடியாது.

அதே நேரத்தில் இந்த தாக்குதலுக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடு என்னும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன் நிறுத்துவதால் அது பாஜகவுக்கு எதிராகவும் திரும்ப வாய்பு உள்ளது” என கூறப்பட்டுள்ளது.