பிரபாஸ் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட், “பாகுபலி 2” படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் ‘சஹோ’ படத்தைபு்பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக பிரபாஸின் ஜோடி யார் என்பதுதான் அனைவரும் கேட்கும் கேள்வி.
சஹோ படமும் பெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டாம்!
இதிலும் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. ஆனால், “பாகுபலி 1,2 இரண்டிலும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம். அடுத்த படத்திலும் இரவரும் இணைந்து நடித்தால், ரசிகர்களுக்கு போர் அடிக்கும். ஆகவே வேறு நாயகியுடன் நடிக்கிறேன்” என்று பிரபாஸ் தெரிவித்தாராம்.
இதையடுது கதாநாயகி தேடும் படலம் நடந்தது. பல பெயர்களை பரிசீலித்த பிறகு, பாலிவுட் நடிகை கேத்ரீனா கெய்ப்பை அணுகியிருக்கிறது படக்குழு.
பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். கால்ஷீட் தர ஒப்புக்கொண்ட கேத்ரீனா, சம்பள விஷயத்தில் கராறாக இருக்கிறாராம். ஆனாலும் உடன்பாடு ஏற்பட்டு விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
ஆக, பிரபாஸுக்கு ஜோடி சேர்கிறார் கேத்ரீனா.