1446220320-9275

 

 

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். டாஸ்மாக் மதுக்கடைகளை எதிர்த்து “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை இயற்றி பாடி அதனை இணையதளத்தில் பதிவேற்றியதற்காக அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1446524727-5024

கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கோவன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதன் பிறகு நாம்தான் கோவனை மறந்துவிட்டோம். ஆனால் உலகம் முழுதும் அவரது பெயர் பரவி வருகிறது.

கோவன் கைது குறித்த செய்தி தற்போது வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டெய்லி பாகிஸ்தான் நாளிதழும் கோவன் கைது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.