students

சென்னை:

ழை வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்றோடு பதினோரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நான்கு நாட்கள்.. அதாவது 22ம் தேதி வரை சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இதே போல் பகாஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்

“தமிழகம் புதுச்சேரியில் மேலும் மழை தொடரும் என்றாலும், புயலுக்கு வாய்ப்பு இல்லை” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

பிறகு ஏன் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் விடுமுறை என்று பெற்றோர்கள் மட்டுமல்ல.. வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மாணவர்களும் ஆதங்கப்படுகிறார்கள்.

பள்ளி கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, “மழை நின்றுவிட்டது என்றாலும் பெரும்பாலான பள்ளிகளின் வாகனங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அதே போல சில கல்வி நிலையங்களின் கட்டிடங்கள் பலவீனமடைந்திருக்கின்றன. இப்போது அவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும். இந்த நான்கு நாட்களில் சரி செய்தால்தான் 23ம் தேதி அன்று பள்ளி கல்லூரிகள் முழு வீச்சில் நடக்கும்” என்றனர்.