
நடிகர் சிம்பு, தனது 32வது பிறந்தநாளை இன்று காலை தனது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். அவர் நடித்த “இது நம்ம ஆளு” படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று மாலை நடக்கிறது. இந்த படத்தை சிம்புவின் அப்பா டி.ஆர். தாயரிக்கிறார். அதோடு, சிம்புவின் தம்பி இசை அமைக்கும் முதல் படம் இது.
ஆகவே, அந்த மேடையிலேயே மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்திருந்தார் சிம்பு. பீப் பாடல் சர்ச்சைக்குப் பிறகு, பதுங்கிய இருந்தவர், இன்று அனைவர் எதிரிலும் தோன்றி, பிறந்த நாளை கொண்டாட இருந்தார்.
ஆனால் அதில் திடுமென மாற்றம் ஏற்பட்டது. ஆகவே, இன்று காலை தனது வீட்டில் எளிமையாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அப்பா டிஆர். அம்மா உஷா, தம்பி குறளரசன், தங்கை இலக்கியா ஆகியோர் இருந்தார்கள். அதோடு நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில ரசிகர்கள் இருந்தார்கள்.
சிம்புவுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்! இனி நல்லதே நடக்கட்டும்! சிம்புவும் நல்லபடியாகவே நடக்கட்டும்!
Patrikai.com official YouTube Channel