@ எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கி போய்விடும். ஆகவே வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வந்தால் எப்போதும் மின்னனும்.
@ எறும்புத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழி. ஒரு குவளைர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிடுங்கள். எறும்புகள் அண்டாது!
@ கொலுசு வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்
@ துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் சாதாரணமாக போகாது. துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவுங்கள்..கறை காணாமல் போய்விடும்.
@ பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யுங்கள். ஓட்டை அடைபடும்.
@ எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
@ ஷாம்புவை பயன்படுத்திய பிறகு அப்படியே தூக்கி எறியாமல், அந்த கவர்களை துவைக்கும் துணிகளுடன் ஊறவையுங்கள். துணி வாசனையாக் இருக்கும்.
@ அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்த்தால், துர்நாற்றம் இருக்காது.
@ பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
தோழிகளே.. நீங்களும் வீட்டுக்குறிப்புகளை ungalpathrikai.com இதழுக்கு அனுப்புங்கள்.
மெயில்: pathrikaidotcom@gmail.com