ஹவ்ரா:
தொழிற்சங்கங்கள் விடுத்த 2 நாள் முழு அடைப்பு போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, இது குறித்து ஒரு வார்த்தை கூட பேச விரும்பவில்லை. எந்த முழு அடைப்பையும் ஆதரிப்பதில்லை என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
முழு அடைப்பு நடத்தியே 34 ஆண்டுகள் இடதுசாரிகள் மாநிலத்தை நாசப்படுத்திவிட்டனர். முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட இன்றும் நாளையும் அரசு ஊழியர்களுக்கு விடுப்போ, அரை நாள் விடுப்போ , சாதாரண விடுப்போ வழங்கப்படமாட்டாது என்றார்.