பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை
பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை

டாக்கா:
பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பங்களாதேஷ் டாக்காவின் தெற்கு மாவட்டமான குல்னா பகுதியை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர், (26). சைக்கிள் ரிக்ஷா தொழிலாளியான இவர் தற்போது, கை, கால்களில் மரம் முளைத்து அவதிப்படுகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் கையில் முளைத்ததை அவர் வெட்ட முயன்றார். வலித்ததால் விட்டுவிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக புதர் போல் மண்டிவிட்டது. மிகவும் அறிய வகை தோல் நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்களை மரம் மனிதம் என அழைப்பதுண்டு.
சுமார் 5 கிலோ எடை அளவில் முளைத்து காணப்படுகிறது. உலகளவில் இந்த நோயால் 3 பேர் இது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் இந்தோனேசியாவில் விவசாயி ஒருவருக்கு இது போன்ற நோய் தாக்கி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அதேபோல் பஜந்தருக்கும் டாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அனைத்து கட்ட பரிசோதனைகளும் முடிந்துள்ளது. நரம்பு மற்றும் உடல் நலத்திற்கு எவ்வித பாதிபும் ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சையை நடத்தி முடிக்க சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மனிதனின் கை, கால்களில் மரம் முளைத்திருக்கும் தகவல் அறிந்தவுடன் பஜந்தர் வீட்டிலும், மருத்துவமனையிலும் அவரை பார்க்க கூட்டம் கூடி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.