தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி.
இவர் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், அவர் தனது தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
என் தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக்கொள்வேன். உங்களைப் போல யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் வேதனையில் உள்ளது. மன்னிக்கவும், உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கின்றீர்கள். அதை இந்த விஷயத்திலும் எடுத்துக் கொள்கிறேன்.
நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருந்தது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்பது உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் மேலே இருந்து ஆசீர்வாதங்களைத் தருவீர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை நீங்கள் முழுமையாக நம்புனீர்கள். உங்களுடைய விருப்பங்களை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
ஒரு பொன்னான இதயம், துடிப்பதை நிறுத்திவிட்டது. என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடினமாக உழைக்கும் உங்களை கடவுள் விரும்பி எடுத்துக் கொண்டார். எப்போதும் எங்களை சுற்றி நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம். எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CHRwgw1nEJC/