இயக்குனர் வினோத் இயக்கி வரும் அமிதாப் பச்சனின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

அஜித்துடன் இப்படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைரங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாஜலம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தல 59 படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று படக்குழுவினர் டைட்டில் வைத்துள்ளனர்.