உத்திரபிரதேசத்தில் நடுத்தெருவில் தலித் கணவன் மனவி ஆடை களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதன் விவரம் இதுதான்:
சுனில் கௌதம் என்பவர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தன் வீட்டில் களவு போய்விட்டதாக புகார் கொடுக்க வியாழன்று தன்கௌர் காவல் நிலையத்திற்கு தன் மனைவி, குழந்தையுடன் செல்லுகிறார். ஆனால் போலீசாரோ புகாரை வாங்கவே மறுக்கின்றனர். கௌதம் காவல் நிலையம் முன்பே தர்ணாவில் இறங்குகிறார்.
ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை அடித்து, ஆடைகளையும் கிழித்து, நிர்வாணமாக்குகின்றனர்.
இதை அம்பலப்படுத்தியது ஹரிபூமி என்ற இந்தி நாளேடு.
கொடுமை என்னவெனில் சம்பவ வீடியோ முகநூலில் பகிரப்பட, எல்லோரும் பதைபதைக்க அகிலேஷ் யாதவ் அரசு அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என சாதிக்கிறது,
அரசின் ட்விட்டரில், இவர்களாகவே அவிழ்த்துப்போட்டுவிட்டு தேவையில்லாமல் போலீசை குற்றஞ்சொல்லுகின்றனர். எங்களிடம் உள்ள வீடியோ உண்மையில் என்ன நடந்ததோ அது அப்படியே பதிவாயிருக்கிறது என நொய்டா காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகிறார்.
– டி.என். கோபாலன்