பலத்த மழை காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
இதில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம் சேற்றில் சிக்கியுள்ளதால், தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முழுவதுமாக நீரை வெளியேற்றி முடியாததால் நான்காவது நாளாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பல இடங்களில் நிலவும் மின்தடை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.