images
பீப் பாடல் சர்ச்சை கிளம்பி, சிம்பு வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம், காவல்துறையில் புகார், வழக்கு என்று பரபரப்பு ஏற்பட்டவுடன், “வெளிப்படாமல்” இருந்தார் சிம்பு. (தலைமறைவு இல்லை என்கிறார்கள் குடும்பத்தினர்!)  சிம்புவுக்கு பதிலாக அவரது அப்பா டி.ஆர்.தான் அவ்வப்போது மீடியாவிடம்  ஆஜராகி “சிம்பு எழுதினது உலகமகா காவியம்” என்கிற ரேஞ்சுக்கு வக்காலத்து வாங்கினார்.
இந்த நிலையில் நாளை சிம்பு, “வெளிப்படுவாரா” என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. காரணம், .   உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  நாளை (11 ம் தேதி)  சிம்பு ஆஜராக வேண்டும்.
இதே விவகாரத்தில், கோவையில் சிம்பு மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு, சிம்பு ஆஜராகவில்லை. அவர் சார்பாக வக்கீல்தான் விளக்கம் கொடுத்தார்.   அதே போல, நாளையும் அவரது வக்கீல்தான் “ஆஜராவார்”. இதைத்தான் சிம்புவின் தந்தை டி.ஆர் விரும்புகிறார் என்கிறார்கள்.
ஆனால், நீண்டநாளாக “வெளிப்படாமல்” இருக்கும் சிம்பு, (“தலைமறைவு” என்று எழுதினால் டி.ஆர். கோபிக்கிறார்!) இதை தனது தன்”மானத்துக்கு”(!) இழுக்காக நினைக்கிறாராம்.
ஆகவே போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு தானே நேரில் ஆஜராக விரும்புகிறாராம்.
இதற்கிடையில் சிம்பு மீதுசென்னையில் போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று ஒரு மனு சிம்பு சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .இந்த மனுவின் மீதான விசாரணை நாளை மறுநாள் வெளியாகிறது.  அதில்  சிம்புவுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்பட்சத்தில் சென்னை போலீசில் ஆஜராக வேண்டிய தேவை இருக்காது. ஆகவே, “நாளை ஒரு நாள் பொறுத்துக்க  சிம்பு.. அதுக்கப்புறம் “வெளிப்பட்டா” நமக்கில்ல வம்பு” என்று  எதுகை மோனையில் கதறுகிறாராம் டி.ஆர்.
ஆனால் சிம்பு,  அஸ் யூஷூவல்,  அதை கேட்பதாய் இல்லை. இப்போது, “போகாதே.. போகாதே என் மகனே…” என்று  அம்மா உஷாவும் மன்றாட ஆரம்பித்திருக்கிறாராம்!
“ஹூம்..  இன்னிக்கு ராத்திரியும் டி.ஆருக்கும், உஷாவுக்கும் தூக்கம் போச்சு…!  பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு சொல்லுவாங்க.. . சிம்பு மாதிரி பிள்ளைய பெத்தா ரத்தக்கண்ணீர்தான்.. ங்கொய்யால!” என்று ஆதங்கப்படுகிறார்கள் டி.ஆர் மற்றும் உஷாவின் நலம் விரும்பிகள்!