மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு வருடங்களாக வறட்சி கடுமையாக இருக்கிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடன் தொல்லைகளை தாங்க முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் நாசிக் பகுதி விவசாயிகள் அரசை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறா்கள். தற்போது சாலையை ஆக்கிரமிக்கும் போராட்டம் நடத்துகிறார்கள். இரவு நேரத்தில் சாலையிலேயே உறங்குகிறார்கள்.
FotorCreated90
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது: “வறட்சியால் கடந்த இரு வருடங்களாக கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உரிய இழப்பீடு தரவேண்டும். ஆனால் மகராஷ்டிர மாநில அரசோ, மத்திய அரசோ உரிய நிவாரணம் தரவில்லை. 2022ம் வருடம், விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு உயரும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது முழக்கமிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் விவசாயிகளின் தற்கொலைதான் இருமடங்கு அதிகரித்திருக்கிறது. விவாசியகளை இந்த அரசு கவனிக்கவில்லை. ஆனால் பதான்கோட்டில் விமான படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க வந்த பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பிரியாணி அளிப்பதில் முனைப்புடன் இருந்தது.
இனியாவது விவசாயிகளின் நிலையை புரிந்து தகுந்த நிவாரணம் வழங்குவதில மகராஷ்டிரா மாநில அரசும், மத்திய அரசும் கவனம் செலுத்த வேண்டும்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
புகைப்படம் நன்றி : Pranil Dhandar