tn
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பூண்டி சாலையில் நேற்று முன் தினம் தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுக பிரமுகரும், பூண்டி ஒன்றிய கவுன்சிலருமான பூண்டி பாஸ்கர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். இதற்கு பூண்டி பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் புல்லரம்பாக்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.