மக்கள் நலக்கூட்டணித்தலைவர்கள் வைகோ, திருமாவளவன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தேமுதிக தலைமை அலுவலகம் வந்தனர். அங்கே விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடுவது என்பது உறுதியானது. விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் முடிவானது.
தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், மக்கள் நலக்கூட்டணி 110 இடங்களில் போட்டியிடுவது எனவும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.