முதல் நாள் நாயகன் & அபிநயா பேசியதில் கொஞ்சம் டென்சன் ஆகியிருந்த நிலையில் ஸ்ரீயின் அழைப்பு வேறு குழப்பத்தை உண்டு பண்ண ஸ்ரீயிடம் செல்கிறாள் நாயகி.
ரொம்ப வருத்ததோடு காணப்படும் ஸ்ரீயிடம்
” என்னாச்சு ஸ்ரீ எதுவும் பிரச்சனையா ?”
” எல்லாம் இந்த பத்மினி பண்ணின வேலை ” கோபமாக பேசும் ஸ்ரீயிடம்.
“என்ன பண்ணினாங்க ?” நாயகி கேட்க.
” எனக்கு அம்மா கிட்ட பேசியிருக்காங்க. ”
” அம்மா கிட்டயா ”
” ஆமா அவன் தப்பானவன் நம்ம பொண்ணை பேசவேண்டானு சொல்லு, நான் சொல்லிபார்த்துடேன் கேக்கலன்னு அம்மா கிட்ட சொல்லி அவங்க போன் பண்ணி…”
” இவங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை ஸ்ரீ !”
“அதுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு ” கோபமாக கத்தும் ஸ்ரீ யிடம்.
” அவங்க உனக்கு அம்மா மாதிரி அப்படியெல்லாம் பேசாத
சரி என்ன தான் அம்மா சொல்றாங்க ?” என நாயகி கேட்க.
” அவங்களுக்கு நீ சப்போர்ட் பண்ற அவங்க உன்னை தான் தப்பா சொல்லியிருக்காங்க ”
” என்னையவா !” அதிர்ச்சியோடு கேட்கும் நாயகியை
” டென்சன் ஆகாத அம்மா கிட்ட நீ அப்படியெல்லாம் இல்லன்னு சொல்லிட்டேன் ”
“அவங்களே சொன்னதா இருக்கட்டும் ஸ்ரீ அம்மா எப்படி நம்பினாங்க !? என்னை பார்த்திருக்காங்க, பேசியிருக்காங்க… ” ஆதங்கத்தோடும் கேட்கும் நாயகியை பாதியில் பேச்சை நிறுத்தி
” என்னயிருந்தாலும் அவங்க சொந்தகாரங்க அவங்க பேச்சை தான் நம்புவாங்க ” என்று சொல்கிறாள் ஸ்ரீ.
நிலைமை நன்றாக புரிகிறது நாயகிக்கு தன் உறவுகார பெண்ணை எதுவும் குறைசொல்ல கூடாது என்பதால் அங்கே நாயகியை தவறாக சித்தரித்து இருக்கீறார் பத்மினி.
குடும்ப நண்பரான ஸ்ரீ குடும்பத்தில் தான் செய்யாத தப்புக்கு அசிங்க பட்டிருப்பது மனவலியை உண்டு பண்ணுகிறது.
அமைதியாக இருக்கு நாயகியை பார்த்து.
“நீ டென்சன்னாவனு தான் சொல்லவேண்டான்னு நினைச்சேன்…”
ஸ்ரீயின் பேச்சு எதையும் காதில் வாங்காமல் அமைதியாக இருக்கும் நாயகியை கவனிக்கும் ஸ்ரீ.
அருகில் அமர்ந்து
” கவலை படதே அம்மாவுக்கு புரியவச்சிடேன் ”
” புரிஞ்சுகிட்டான்களா ஸ்ரீ ”
“புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன் ” சந்தேகத்தோடு சொல்கிறாள் ஸ்ரீ.
” என்ன சொன்னங்க ?”
” நீ பண்ணின முட்டாள் தனத்தை அம்மா கிட்டயும் சொல்லியிருக்கு பத்மினி ” என்கிறாள் ஸ்ரீ.
“என்ன முட்டாள் தனம் !? புரியல…” குழப்பத்தோடு ஸ்ரீயை பார்க்கிறாள் நாயகி.
“உன் கை மேட்டர் தான்”
மேலும் அதிர்ச்சியாகும் நாயகி.
” இது நீ, நான், அவன் மூணுபேரை தவிர யாருக்கும் தெரியாதே ஸ்ரீ அவங்களுக்கு எப்படி தெரியும் நீ ஏதும் சொன்னியா !?
நாயகியின் கேள்விக்கு பதட்டத்தோடு ” சத்தியமா நான் எதுவும் சொல்லல ” ஸ்ரீ சொல்ல
” அப்போ அவங்களுக்கு யார் சொல்லியிருப்பா ஸ்ரீ ”
“தெரியல ஆனா தெரிந்திருக்கு என் கிட்ட பேசும்போது கூட இதை பத்தி சொன்னாங்க ”
“ம்ம்…” வருத்ததோடு இருக்கும் நாயகியிடம் ஸ்ரீ.
” feel பண்ணாத ”
” அம்மா என்ன சொல்றாங்க ?” வெறுமையோடு நாயகி கேட்க.
” அவனை block பண்ண சொல்லி அழுதாங்க, பேசக்கூடாதுன்னு கெஞ்சுறாங்க நானும் அவனை வேற வழியில்லாம block பண்ணிட்டேன் ” என்கிறாள் ஸ்ரீ.
“Block பண்ணிடீயா ஸ்ரீ !?”
“ஆமா அவன் கிட்டயும் நடந்ததை சொல்லிட்டேன் ”
” என்ன சொன்னான் ?”
” சரி உன் வாழ்க்கையை பாருன்னு சொன்னான் ” என்கிறாள் ஸ்ரீ.
” ஏற்கனவே அவன் Vex ஆகிருந்தான் ” என்று சொல்லும் நாயகியிடம்.
” Vex ஆகியிருந்தானா ! ஏன் ?” ஸ்ரீ கேட்க.
முதல் நாள் நடந்த விசயங்களை சொல்கிறாள் நாயகி.
“ஆனா ஸ்ரீ நான் பீச்ல அபிநயாவை மீட் பண்ணிய விஷயத்தை யார் சொல்லி அவனுக்கு தெரியும்னு தெரியல ஸ்ரீ ” குழப்பமாக கேட்கும் நாயகியிடம்.
” அந்த அபியே சொல்லியிருக்கும் !” என்கிறாள் ஸ்ரீ.
” இல்ல ஸ்ரீ அவங்க சொல்லலையாம் கேட்டுட்டேன். ”
” பொய் கூட சொல்லலாம்ல ” என்கிறாள் ஸ்ரீ.
குழப்பத்தோடும், கொஞ்சம் வேதனை கலந்த குரலில் நாயகி
” அப்படியும் தெரியல. ஸ்ரீ ஒன்னு கேட்பேன் மறைக்காம உண்மைய மட்டும் சொல்லணும் ”
” கேளு ”
“அம்மா அவனை மட்டும் தான் block பண்ண சொன்னாங்களா !? இல்ல என்கிட்டயும் பேசகூடாதுன்னு சொன்னாங்களா !?”
” அவனை மட்டும் தான் சொன்னங்க ” நாயகியின் முகத்தை பார்க்க திறன்னின்றி சொல்லும் ஸ்ரீயின் வார்த்தைகள் கேட்டு விரக்தியோடு புன்னகைத்து வெளியேறுகிறாள் நாயகி.
(தொடர்ச்சி.. வரும் சனிக்கிழமை..)