
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா யுகாதித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘’பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து சகோதர, சகோதரிகளாய் அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, தொழில், வணிகம், கல்வி, கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமையதுள்ளது.
மலரும் இயதப் புத்தாண்டு, வாழ்வில் வளம், நலம் மற்றும் வெற்றிகளை வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel