
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “நீங்க எல்லாம் பத்திரிகையாளரா.. தூ..” என்று “பதில்” அளித்தார் தே.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த்.
அடுத்ததாக, கேள்விகேட்ட பத்திரிகையாளரை “உனக்கு அறிவிருக்கா..” என்று கேட்டார் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா.
இருவரின் பே(ஏ)ச்சும் பெரும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியது. விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர் சங்கங்கள் சில போராட்டங்களையும் நடத்தின.
இந்த நிலையில், விஜயகாந்த் – இளையராஜா வரிசையில் சேர்ந்திருக்கிறார் பழ. கருப்பையா.
துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், சமீபத்தில் அ.தி.மு.கவில் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து, தந்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் , இவரது பேட்டியும் ஒளிபரப்பானது.
அப்போது, நிகழ்ச்சி நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவை “பண்டே அவர்களுக்கு நல்லதை பாராட்டி பழக்கமில்லை. மனநோயாளியைப் போல விழுந்து பிடுங்குவதுதான் பழக்கம்” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார் பழ. கருப்பையா.
கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், கேள்வி கேட்பவரை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.,
வீடியோ இணைப்பு இங்கே…
https://www.youtube.com/watch?v=7HyKy6puI9A
Patrikai.com official YouTube Channel