தலையை வெட்டி தனியே வீசி...
தலையை வெட்டி தனியே வீசி…

தூத்துக்குடி:
கில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். தென் மாவட்ட நாடார் இன  மக்களிடையே பிரபலமாக விளங்கிய இவர் 2003ம் ஆண்டு சென்னையில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வெங்கடேச பண்ணையாருக்குப் பிறகு  அவரது சகோதரர், சுபாஷ் பண்ணையார் வலம்வருகிறார்.  இவர்களது குடும்பத்திற்கும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதிபாண்டியனுக்கும், இடையே முன்பகை இருந்தது.  இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொல்வது நடந்துவந்தது.
சில வருடங்களுக்கு முன் பசுபதி பாண்டியனும், திண்டுக்கல் அருகே வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார்,  உப்பட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது
சுபாஷ் பண்ணையார் - பசுபதி பாண்டியன்
சுபாஷ் பண்ணையார் – பசுபதி பாண்டியன்

இந்த நிலையில், சுபாஷ் பண்ணையார் தூத்துக்குடி அருகேயுள்ள பழையகாயல் சர்வோதயாபுரியில் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சுமார் இருபது பேர் கொண்ட கும்பல் அங்கு புகுந்தது. பண்ணையாரை நோக்கி வெடிகுண்டுகளை வீசியது.  ஆகவே,  அங்கிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக தப்பித்து ஓடினார்கள்.
ஆனாலும் கையில் கிடைத்தவர்களை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டித் துண்டாக்கியது.   இதில், ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி ஆகிய இருவர் உயிர் இழந்தனர். பிறகு  கொலைக் கும்பல் ஆறுமுகச்சாமியின் தலையை மட்டும் துண்டித்து கையோடு எடுத்துச் சென்றது.
துண்டிக்கப்பட்ட ஆறுமுகச்சாமியின் தலையை தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் உள்ள தெய்வச்செயல்புரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே எடுத்துச் சென்றது. அங்கு  அமைக்கப்பட்டிருக்கும்  தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனின் படத்துடன் கூடிய பெயர்பலகையின் கீழ் தலையை வீசியது.
தனது தோட்ட பராமரிப்பு பணிகளை சுபாஷ் பண்ணையார், கடந்த நான்கு நாள்களாக கண்காணித்து வந்த கொலைக்கும்பல்,  திட்டமிட்டு இந்த படுகொலைகளை செய்துள்ளது.
இதற்கிடையே, சாதி மோதல் ஏற்பட்டுவிடாதபடி தடுக்க  தடுக்க தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.