Tibetan refugees to get Indian passports
1950ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிறந்த திபெத்தியர்களுக்கு, பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர்களாகிறார்கள்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், திபெத்தியர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க வேண்டும் என நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார். அதனை ஏற்ற மத்திய அரசு, 1950ம் ஆண்டு முதல் 1987 வரையிலான காலக்கட்டத்திற்குள் இந்தியாவில் பிறந்த திபெத்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் குடியுரிமைச் சட்டத்தின்படி எந்தக் கேள்வியும் எழவில்லை என்றும் விளக்கமளித்தது.
அதன்படி திபெத்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குத் தேவையான மாற்றங்களை, குடியுரிமைச் சட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள அனைத்து பாஸ்போர் அலுவலகங்களுக்கும், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ள 1950 முதல் 1987ம் ஆண்டுக்கு உட்பட்ட காலக்கட்டத்திற்குள் பிறந்த திபெத்தியர்களுக்கு பாஸ்போர்ட்டுகளை வழங்க மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற வழிவகை பிறந்துள்ளது.