
“அவன் – அவள்” – பெயரைப்பார்த்தவுடன் ஏதோ காதல் கதை என்று தோன்றுகிறது அல்லவா… ? “அதுதான் இல்லை.. இது அதிர வைக்கும் திகில் திரைப்படம்” என்கிறார் படத்தின் இயக்குநர் ராம்கிரீஷ் மிரினாளி.
விக்னேஷ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தேவிகா மாதவன் மற்றும் சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள்.
“திகில் திரைப்படம் என்பதற்காக யதார்த்தை மீறி ஒரு காட்சியும் இருக்காது. ஏனென்றால், இப்பொழுது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்கள்தான் படத்தின் கதைக்கு அடிப்படை.

கணவன் , மனைவி எப்படி புரிதலுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ வேண்டும் என்தை சொல்லும் படம் இது. விட்டுக் கொடுக்காமல் ஒன்றை விட ஒன்றை ஒப்பிட்டு பார்த்து கணவன் மனைவிக்குள் எப்படி சிக்கலை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.
80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலிலும் 20 சதவீதம் சென்னையிலும் நடைபெற்றுள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன.” என்கிறார் இயக்குனர் ராம்கிரிஷ் மிரினாளி.
Patrikai.com official YouTube Channel