டெல்லி

னி மத்திய அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்தால் அது அரைநாள் விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கல் மனதில்படித்து முடித்ததும் ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ண ஓட்டம் உள்ளது. இதற்குக் காரணம் ஓய்வூதியம், விடுமுறை, அரசு சலுகை என பல உண்டு. ஆனால் அரசு வேலை என்பது உயர்வாக பார்க்கப்பட்டாலும், அரசு ஊழியர்கள் உயர்வாக பார்க்கப்படுவதில்லை.

சில அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு காரணமாக அரசு ஊழியர்கள் என்றாலே தாமதமாக வேலைக்கு வருவார்கள், அலட்சியமாக வேலை நடைபெறும், லஞ்சம் என பல குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன. எனவே இதனை முறைப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவ்வகையில் தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது  அதன்படி மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தாமதமாக அலுவலகம் வந்தால் அவர்களுக்கு அரைநாள் விடுப்பு கட்டாயம் ஆக்கப்படும் என்றும், தாமதமாக வருவது தெரிய வந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் அலுவலகத்தில் இருந்து திரும்புதல் என  கண்காணிப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த சுற்றறிக்கையால் தாமதமாக அலுவலகம் வரும் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், ஆனால் சாமானிய மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.