tajmahal
தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணத்தை இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய தொல்லியத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாஜ்மகாலுக்கு வரும் இந்தியர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும். இது முன்னதாக ரூ.20 ஆக இருந்தது. அதே போல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணமாக ரூ.1000ம் செலுத்த வேண்டும். இந்த தொகை முன்னதாக ரூ.750 ஆக இருந்தது.
முன்னதாக இந்த தொகை ரூ.50 ஆகவும், ரூ.1,250 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், சுற்றுலாத் துறையினரும், சுற்றுலா ஏஜெண்டுகளும் கடுமையாக எதிர்த்த காரணத்தால் ரூ.40 மற்றும் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.