ஆபாச பாடல் வழக்கில் சிக்கியிருக்கும் நடிகர் சிம்பீப் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் நாளை மறுநாள் போலீஸில் ஆஜராக வேண்டும்.
அனிருத் கனடாவில் இருக்கிறார். இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து பிறகு அப்படியே மும்பை செல்லுமாறு இங்கிருக்கும் அவரது நலம் விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள். மும்பையில் இருந்தபடியே தனது “இசைப்பணி”யை தொடர இருக்கிறார் அனிருத்.
சிம்பீப் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது. அந்த நேரத்தில் ஒரு பகீர் தகவல் கிளம்பியது. “சிம்பு வீட்டின் முன் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வீட்டில்தான் சிம்பு இருந்தார்” என்பதுதான் அது. ஆனால் அந்தத் தகவல் உண்மையல்ல என்கிறார்கள்.
இங்கே பிரச்சினை பெரிதாக வெடித்ததும், சிம்புவை வெளியூர் போகச் சொல்லியிருக்கிறார்கள் அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷாவும். ஆனால் வழக்கம்போலவே பிடிவாதமாய் மறுத்திருக்கிறார் சிம்பீப்.
பிறகு கெஞ்சி கூத்தாடி, பெங்களூருவுக்கு அனுப்பினார்களாம். அங்கே, டி.ராஜேந்தருக்கு நெருக்கமான நண்பர் வீட்டில் சிம்பு இருக்கிறார் என்றும், பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் வழியில் உள்ள ரிசார்ட்டில் இருக்கிறார் என்றும் இருவேறுவிதமாக சொல்கிறார்கள். சிம்புவுடன் உஷாவின் நெருங்கிய உறவினர் ஒருவரும் சென்றிருக்கிறாராம். அங்கிருந்து சிம்புவின் நடமாட்டத்தை பெற்றோருக்கு லைவ் ரிலே செய்வதுதான் அவரது வேலையாம்.
சிம்பு அனிருத் இருவர் வீட்டிலிருந்தும் “தோட்டத்தை” தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து நோ ரெஸ்பான்ஸ். தவிர, “சட்டப்பட்டி நடவடிக்கை எடுங்கள்” என்று இன்ஸ்ட்ரெக்சன் வந்திருக்கிறதாம்.
ஆகவே காவல்துறை இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, தன் கடமையைச் செய்யும் என்கிறார்கள்.
அதே நேரத்தில் நாளை மறுநாள் சிம்பு, அனிருத் இருவரும் காவல்துறையினரிடம் ஆஜராக மாட்டார்களாம். அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களே ஆஜராவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்த சூழ்நிலையில், சிம்புவைத்தேடி போலீஸ் டீம் பெங்களூரு பறக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதே போல மும்பை வந்தாலும் அனிருத்தைத் தேடி போலீஸ் பறக்குமாம்.
அவனுங்கள விடாதீங்க சார்.. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!