சென்னை: மாநில வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.  வஃபு வாரியத்துக்க இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்க்கப்படாததால், வக்பு வாரியத்தின் அமைப்பு முழுமையடையவில்லை என்றும், அது சட்டத்தின்படி இல்லை என்றும் கூறி, அதன் அமைப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக,  சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சவுகத் அலி முகமது  என்பவர், தாக்கல் செய்த மனுவில், தமிழக வக்ஃப் வாரியத்துக்கு தலைவா் உள்பட 10 பேரை நியமனம் செய்து, கடந்த ஆண்டு நவ. 28-ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது.  மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை சட்டத்தை முறையாகப் பின்பற்றாமல் வாரிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.  எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், சட்ட விதிகளின்படி, வக்ஃப் வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினா்களில் 2 போ் முஸ்லிம் அல்லாதவா்களாக இருக்க வேண்டும். மாநில பாா் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினா் நியமிக்கப்பட வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மேலும், துணைப்பிரிவு (1)-இன் கீழ் நியமிக்கப்படும் வாரியத்தின் மொத்த உறுப்பினர்களில், பதவிவழி உறுப்பினர் தவிர்த்து, இருவர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்ற இரண்டாவது நிபந்தனையும் பூர்த்தி செய்யப்படவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில், பிரிவு (d)-இன் கீழ் இரண்டு உறுப்பினர்களில் ஒருவரையும், பிரிவு (f)-இன் கீழ் ஒருவரையும் நியமிக்கும்போது, ​​பிரதிவாதிகள் இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கலாம். இன்று உள்ளபடி வாரியத்தின் அமைப்பு, மேலோட்டமாகப் பார்க்கும்போது, ​​சட்ட விதிகளுக்கு இணங்கவில்லை,” என்று தீர்ப்பளித்தது. அதனால்,  தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

[youtube-feed feed=1]