
தேமுதிக – மக்கள் நல கூட்டணி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்தது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.
இந்த விமர்சனங்கள் பற்றி வைகோ ஆவேசப்பட்டுள்ளார். அவர், ’’தமிழிசை என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவர் இருக்கக்கூடிய பொறுப்பில் இருந்து கொண்டு அவ்வாறு பேசுவது நாகரீகமல்ல. அவரை அந்த பதவிக்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. விஜயகாந்த் பூஜ்ஜியம் என்றால் அவரை சந்திக்க தவம் கிடந்தது ஏன்?’’ என்று சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel