tamilaga meanvarkalஇலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 99 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் மீனவர்கள் இன்று விடுதலையாக வாய்ப்புள்ளதாக ராமேசுவரம் மீனவசங்க பிரதிநிதிகள் கூறினர்.
ராமேசுவரம்,பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 49 மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் 99 பேர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் இந்தியா, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 99 மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களை விடுவிக்ககோரி இலங்கை அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதன் பேரில் இலங்கை அரசு சிறையிலுள்ள 99 மீனவர்களையும் விடுவிக்க அந்தந்த நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு இன்று பரிந்துரை செய்தது. அதன் பேரில் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 99 பேரையும் இலங்கை நீதிமன்றங்கள் மனிதாபிமானம் அடிப்படையில் இன்று விடுதலை செய்தவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பின்னர் ஒரு சில நாட்களில் அவர்கள் தமிழகம் திரும்பி வருவார்கள் எனவும் ராமேசுவரம்,பாம்பன் பகுதி மீனவர்கள் சங்க தலைவர்கள் அருள்,எஸ்.பி.ராயப்பன்,எமரிட்,சகாயம் ஆகியோர்கள் தெரிவித்தனர்.