புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
விரைவில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தேர்தல் வரைக்குமான இறுதி இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 250 கோடி ரூபாய்
* தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 100 கோடி ரூபாய்
* திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக 150 கோடி ரூபாய்
* தமிழ்மொழி வளர்ச்சிக்காக 32.74 கோடி ரூபாய்
* காவல்துறைக்கு 6,099.88 கோடி ரூபாய் .
* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 227 கோடி ரூபாய்
* சிறைச்சாலைகள் துறைக்கு .281.28 கோடி ரூபாய் .
* நீதி நிர்வாகத் துறைக்கு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் .985.51 கோடி ரூபாய்
* வருவாய்த் துறைக்கு மொத்தமாக .5,974 கோடி ரூபாய் .
* மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு .713 கோடி ரூபாய் .
* வேளாண் துறைக்கு .6,938.57 கோடி ரூபாய் .
* கால்நடைப் பராமரிப்புத் துறைக்காக 1,188.88 கோடி ரூபாய்
* பால்வளத் துறைக்காக ரூ.119.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மீன்வளத் துறைக்கு ரூ.742.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைக்காக ரூ.677.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.3673.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உணவு மானியத்துக்காக ரூ.5500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சாலைப் பணிகளுக்காக 1,220.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நெடுஞ்சாலைதுறைக்காக ரூ.8486.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மின்சார மானியமாக 7,370.33 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 2,000 கோடி ரூபாயும், கடனுதவியாக 1,483 கோடி ரூபாயும் உட்பட ஆகமொத்தம் மின் துறைக்கு 13,819.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* போக்குவரத்துத் துறைக்கு 1,590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தகவல் தொழிநுட்பவியல் துறைக்கு ரூ.135.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 348.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஊரக வளர்ச்சித் துறைக்காக 18,503.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 12,194.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* குடிநீர் வழங்கல் துறைக்காக 1,802 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பகிர்வுக்காக 9,467.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்திற்காக 689 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 1,032.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக 9,350.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்துக்காக 668 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பள்ளி கல்வித் துறைக்க்கு 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
* உயர் கல்விக்கென 3,821 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சுற்றுலா துறைக்கு 84.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு ரூ.142.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தொழிலாளர் நலன் துறைக்கு 152.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சத்துணவுத் திட்டத்திற்காக 1,645 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 1696 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைகளுக்காக 3,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஆதி திராவிடர் சிறப்பு உதவித் திட்டத்திற்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* ஆதி திராவிடர் நலனுக்காக 2,702.22 கோடி ரூபாயும், பழங்குடியினர் நலனுக்காக 261.66 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்காக 162.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கு தங்கும் விடுதி செலவுகளுக்காகவும், உணவு * வழங்குவதற்கான மாதாந்திர உதவித் தொகைக்காகவும் 79.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான ஆண்டு ஒதுக்கீடு 391.93 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அரசு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பலன்களுக்காக 19,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஆதாரங்கள்
* கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆகவே பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைக்கக்கூடிய விற்பனை வரி வருவாயும் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், ஆண்டுதோறும் மாநில அரசிற்கு சுமார் 4,000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 86,537.70 கோடி ரூபாயாக உள்ள மாநில சொந்த வரி வருவாய், 2016-2017 ஆம் நிதியாண்டில் 96,531.41 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்டதைவிட, வணிகவரி வருவாய் 11.69 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2016-2017 ஆம் நிதியாண்டில் 72,326.45 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
* மாநில ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய், வரும் நிதியாண்டில் 7,101.81 கோடி ரூபாயை எட்டும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், முத்திரைத் தாள்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருவாய் 10,548.25 கோடி ரூபாய் எனவும், வாகனங்கள் மீதான வரிகள் 4,925.05 கோடி ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 9,288.63 கோடி ரூபாய் எனவும், மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 23,688.11 கோடி ரூபாய் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
* பல மத்திய அரசுத் திட்டங்களின் நிதிப் பங்கீட்டு முறை 2015-2016 ஆம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், 2016-2017 ஆம் ஆண்டில் நமது மாநில அரசிற்கு 1,400 கோடி ரூபாயிலிருந்து 2,000 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த மாற்றங்களைக் கணக்கில் கொண்டு, 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானிய உதவி 22,496.08 கோடி ரூபாய் அளவில் மட்டுமே இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் வரவுகள் 1,52,004.23 கோடி ரூபாய் எனவும், மொத்த வருவாய் செலவினங்கள் 1,61,159.01 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக வரும் நிதியாண்டில் 9,154.78 கோடி ரூபாய் அளவிலான வருவாய்ப் பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
* 2015-2016 திருத்த மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 32,359.59 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.94 சதவீதமாகும். 2016-2017 ஆம் ஆண்டில் இப்பற்றாக்குறை 36,740.11 கோடி ரூபாயாக இருக்கும்.
* வரும் நிதியாண்டில் 37,782 கோடி ரூபாய் வரை கடன் வாங்க மாநிலத்திற்கு தகுதியுள்ள போதிலும், 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கடன் அளவு 35,129 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம்
* மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.1,52,004.23 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசின் சொந்த வரி வருவாய்: 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டின்படி மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.86,537.70 கோடியாகும். 2016-2017 ஆம் ஆண்டில் இது ரூ.96,531.41 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வணிக வரியின் மூலம் பெறப்படும் வருவாய் வரவுகள், 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளை விட 11.69 சதவீதம் உயர்ந்து, ரூ.72,326.45 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டில் மாநில ஆயத்தீர்வைகளின் மூலம் வரவுகள் ரூ.7,101.81 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளை விட 10.47 சதவீதம் அதிகமாக இருக்கும் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாகக் கிடைக்கும் வரவுகள், 11.39 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் ரூ.9,469.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள வருவாய், 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.10,548.25 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* மோட்டார் வாகன வரிவருவாய் 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் ரூ.4,385 கோடி என்று மதிப்பிட்டுள்ளதைவிட உயர்ந்து, 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.4,925.05 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி அல்லாத இதர வருவாய்:
இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2016-2017ல் வரி அல்லாத வருவாய் ரூ.9,288.63 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 மற்றும், 2018-2019 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு:
2016-2017 ஆம் ஆண்டில் மத்திய வரிகளில் நமது மாநிலத்திற்கான பங்கு ரூ.23,688.11 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 மற்றம் 2018-2019 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்:
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.22,496.08 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வருவாய்க் கணக்கில் செலவுகள்:
2016-2017 ஆம் ஆண்டிற்கான வருவாய்க் கணக்கு செலவுகள் ரூ.1,61,159.01 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை விட 9.05 சதவீதம் கூடுதலாகும்.
* மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.62,382.40 கோடியாகும்.
* ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 10,361.59 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
* வட்டி செலுத்துதல் ரூ.21,304.48 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச் செலவுகளில் 13.22 சதவீதமாகும்.
மூலதனக் கணக்கில் செலவுகள்:
மூலதனம் குறித்த செலவுகளுக்கு 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடான ரூ.22,878.45 கோடி, 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.27,585.33 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை:
2016-2017 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.9,154.78 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.36,740.11 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடன்
2016-2017 ஆம் ஆண்டில் ரூ.37,782 கோடி அளவிற்கு கடன் திரட்டுவதற்கு மாநில அரசிற்கு அனுமதியுள்ளபோதிலும், கடன் வாங்குவதை கடந்த காலங்களைப் போல் கட்டுப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிகர கடன் வாங்குதல் ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2017 அன்று, ரூ.2,47,031 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.62 சதவீதம் மட்டுமே ஆகும்.