உச்சநீதிமன்ற தடையை எதிர்த்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபபதி மார்க்கண்டேய கட்ஜூ.
ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கவும் உடன்படவில்லை.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தடையை மீறி ஜல்லிக்கடை நடத்து ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள். தற்போதே சில இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், “ஜல்லிக்க்கட்டு நடத்துவோர் மனநோயாளிகள், பொறுக்கிகள்” என்று சுப்பிரமணியன் சுவாமி டிவிட் செய்துள்ளார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சுவாமி மற்றும் பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் அரசியல் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி அரசைக் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்ந இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அவசரச்சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த முடியும். ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை” என்றார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, “அது முடியவே முடியாது” என மறுத்தார்.
மேலும், “அரசு இயந்திரங்கள் செயல்படாத சூழல் ஏற்பட்டாலோ அல்லது சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறாமல் போனாலோ தான் ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைக்க முடியும்” என்று கூறினார்.