ansari
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய தமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவும் அனுமதி கேட்டு இருக்கிறார். நாளை தமிமுன் அன்சாரி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
இதே போல் இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கி முத்து ஆகியோரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறார்கள்.